அறநெறிதான் ஒழுக்கநெறியை நிலைநிறுத்துவதற்க்கான தளம்.

0

அறநெறிக் கல்விதான் மாணவர்களின் ஒழுக்கத்தை போதிப்பதற்கும் நல்லொழுக்கமும் கட்டுக்கோப்புள்ள சமூகமும் நிலைபெறுவதற்கும் அஸ்திவாரமிடுகின்றது. அந்த வகையில் துறைநீலாவணை விபுலானந்தா அறநெறி பாடசாலையின் சேவையை பாராட்டுகிறேன் என துறைநீலாவணை விபுலானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

துறைநீலாவணை விபுலானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு அறநெறி பாடசாலை அதிபர் சோ.சந்திரகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது, நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் சரவணமுத்து, இராசமாணிக்கக் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா .சாணக்கியன் , ஸ்ரீ தில்லையம்பல பிள்ளையார் ஆலய தலைவர் த.கணேசமூர்த்தி, இலங்கைத்தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி செயலாளர் க.சசீந்திரன், துறைநீலாவணை தெற்கு கிராம அபிவிருத்திச்சங்க நிருவாகி ஆசிரியர் தணிகாசலம், முதியோர் சங்க நிருவாகிகள், விபுலானந்தா அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றிய சாணக்கியன் தரம் எட்டு வரையான மாணவர்களுக்கு கட்டாயமாக அறநெறி கல்வி அவசியம் இதற்க்காக ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை தடுக்க வேண்டியதும் அத்தியாவசியமானது எனவும் குறிப்பிட்டார்.