அலுவலக ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

0

நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் ஒன்றாக இணைந்து உணவு அருந்த வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

உணவு உட்கொள்ளும் போது முகக் கவசத்தை அகற்ற வேண்டியுள்ளது. இதனால் மக்கள் ஒன்றுக்கூடும் போது கோவிட் பரவ கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் பணியாற்றும் இடங்களில் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது கட்டாயமாகும். அத்துடன் பணியாற்றும் இடத்தில் ஊழியர்களின் உடல் வெப்பநிலையை இடைக்கிடையே பரிசோதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.