அலுவலக ரயில் சேவை நேர அட்டவணையில் தற்காலிக மாற்றம்

0

அலுவலக ரயில் சேவையின் நேர அட்டவணையில் தற்காலிக மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலோர ரயில் மார்க்கத்தில் தொடர்ந்தும் ஏற்படுகின்ற தாமதத்தை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய நேர அட்டவணை இரண்டு வாரங்களுக்கு பரீட்சிக்கப்படவுள்ளது.

இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட ரயில் சேவையின் நேர அட்டவணையில் சில மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.