அல்பா, டெல்டா தொற்றாளர்கள் நாட்டின் 9 இடங்களில் அடையாளம் காணப்பட்டனர்!

0

அல்பா என்ற பிரித்தானிய கொரோனா வைரஸ் வகை தொற்றுடன் நாட்டின் 9 பிரதேசங்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியக் கொரோனா வைரஸான B117 (அல்பா) வகைக் கொரோனா வைரஸ் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹாராம, கராபிடிய, ராகம ஆகியப் பிரதேசங்களிலேயே இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.