அவுஸ்ரேலியாவில் இருவருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கு தடை!

0

அவுஸ்ரேலியாவில் இருவருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று(திங்கட்கிழமை) முதல் குறித்த தடை அமுலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு ஏற்கனவே 10 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

உலகளவில் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை சமூக இடைவெளியை பேணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.