அ‌ஞ்ச‌லி செலுத்தும் உரிமை மறுப்பு : சாத்வீக ரீதியில் போராட மாவை அழைப்பு

0

தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அ‌ஞ்ச‌லி செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக சாத்வீக ரீதியில் போராடுவதற்கு மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்கால சூழ்நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எடுக்கப்படவேண்டிய முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.