ஆண்களை விட பெண்கள் ஒரே நாளில் கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர்.

0

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை அமைப்பும் இணைந்து நடாத்தும் அழகுக்கலை நிலையங்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் ஒரு தொகுதி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நவீன முறையிலான பயிற்சிகளை பெறு வகையில் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உபகரணங்களை வழங்கி வைத்தபின்ன மாணவர்களிடையே பேசிய இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா சாணக்கியன் இங்கு பயிற்சிநெறியில் பங்குகொள்ளும் 30 இளைஞர் யுவதிகளும் தங்களது வாழ்வாதாரத்திற்க்கு இப்பயிற்சியினை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும், அழகுக்கலை தொழிலின் மூலம் பெண்கள் ஒரே நாளில் இரண்டு மூன்று மாதத்தில் ஆடவர் ஈட்டும் வருமானத்தை விட கூடுதலாக உழைக்க முடிகிறது எனவும் குறிப்பிட்டார்.