ஆபத்தான நிலையை அடைந்து வரும் இலங்கை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

0

கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது தொடர்பில் இலங்கை மோசமான நிலையை அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியாசெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் காணப்படும் நிலைமை தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படுகின்ற நிலையில், அதற்கு மேலதிமாக நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் தேவைகள் உள்ள நாடுகள் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி போடுவதும் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதும் மாத்திரமே என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.