ஆபிரிக்காவின் கொடிய விஷம் கொண்ட நாகம் இலங்கையில்

0

கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய ஊர்வனங்கள் சில பொது மக்களின் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஆபிரிக்காவை தாயமாக கொண்ட கொடிய விஷத்ததை பீச்சியடிக்கும் நாகமும் அடக்கும். 15 முதல் 20 ஆண்டுகள் உயிர் வாழக் கூடிய இந்த நாகம் சுமார் 5 அடி நீளத்திற்கு வளரக்கூடியது.

இந்த நாகம் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். தனக்கு ஆபத்து நேரும் நேரங்களில் உடனடியாக தலையை உயர்த்தி படமெடுக்கும் இந்த பாம்பு 8 முதல் 10 அடி தூரத்தில் இருக்கும் எதிரியின் கண்ணை நோக்கி விஷத்தை பீச்சியடிக்கும் வல்லமை கொண்டது.