ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

0

நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக 750 இற்கும் மேற்பட்ட மாகாண பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.