ஆயுதப் பயிற்சி வழங்கியதாக மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைது!

0

புத்தளத்தில், பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நிஷார ஜயரட்ன கூறியுள்ளார்.