ஆரம்ப பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? – வெளியான புதிய தகவல்

0

கொவிட் அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிக்கின்றார்.

கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய தேசிய திட்டத்தின் கீழ் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டம் எதிர்வரும் 3 முதல் 4 வாரங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.