”ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உன்போம்” – சித்திர போட்டி

0

”ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உன்போம்”  எனும் தொனிப்பொருளில் இலங்கை போசணையாளர் சங்கம், கல்வி அமைச்சுடன் இணைந்து சித்திர போட்டி ஒன்றினை நடாத்தப்படவுள்ளது .

போசணை மனித வாழ்வில் இன்றியமையாததாகும். இந்த போட்டியானது பாடசாலை மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கவனத்துடன் உண்ண வேண்டும் என்பதை உணர வைக்கும் நோக்குடனையே இந்த போட்டி நடத்தப்படவுள்ளது.

இந்த போட்டியானது பாடசாலை மாணவர்களிடையே வகை 1 : தரம் 1 – 5 , வகை 2 : தரம் 6 – 9 , வகை 3 : தரம் 10 -13 ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படவுள்ளது.

போட்டியில் 1ஆம் பரிசு  6000 ரூபாய், 2ஆம் பரிசு 4500 ரூபாய் , 3ஆம் பரிசு  3500 ரூபாய் மற்றும் 10 சாதாரன பரிசுகள்  வழங்கப்படவுள்ளதுடன்,  வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

வெற்றி பெற்ற ஓவியமானது இலங்கை போசணையாளர் சங்கத்தினதும் , கல்வி அமைச்சினதும் வலைத்தளம் மற்றும் அவற்றின் பதிப்புகளிலும் பிரசுரிக்கப்படும் .

போட்டியின் அறிவுறுத்தல், விதிமுறைகள்  மற்றும் நிபந்தனைகள் –

ஓவியங்கள் A3 ( 11.7 x 16.5 inches ) அளவு தாள்களில் வரையப்படவேண்டும். அனுமதிக்கப்பட்ட வரைய பாவிக்கக்கூடிய பொருட்களாவன பஸ்டல் ( Pastel) , நீர் வண்ணங்கள் ( water colours ) , சுவரொட்டி நிற  வண்ணங்கள் ( poster colours ) , மற்றும் எண்ணெய் வண்ணங்கள் ( Oil paints). டிஜிட்டல் ஓவியங்கள் மற்றும் படத்தொகுப்பு ஓவியங்கள் ( collage photos ) அனுமதிக்கப்படமாட்டாது. எல்லா ஓவியங்களும் “ ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன் உண்போம் ” என்ற தொனிப்பொருளிலேயே இருக்க வேண்டும்.

ஓவியத்தின் பின்புறத்தில் பின்வரும் விபரங்கள் காணப்பட வேண்டும் உங்கள் ஓவியத்திற்கான தலைப்பு , முழுப்பெயர் , பிறந்த திகதி , வயது , உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி இலக்கம் , வகை , பாடசாலை மற்றும் தரம், ஓவியம் உங்களுடையது என்பதை  உறுதிப்படுத்த பெற்றோர் / பாதுகாவலர் / வகுப்பு ஆசிரியர் / பாடசாலை அதிபரினதோ கையொப்பம்.

நல்ல தரமான போட்டோவாகவோ ( high quality photograph ) அல்லது ஸ்கேன்  பிரதியாகவோ ( scanned copy ) உங்கள் ஓவியத்தையும் ஓவியத்தின் பின்புறத்தையும் 2020 ஆடி மாதம் 30 ம் திகதியிலோ / அதற்கு முன்னராகவோ sl.nutritionsociety@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

வெற்றியாளர்கள் தமது ஓவியங்களின் மூலப்பிரதிகளை அனுப்ப பின்னர் அறிவிக்கப்படும் . மேலதிக விபரங்களுக்கு ஹசங்கா ரத்னாயக்க (0718154005 / 0779120130 ) தொடர்பு கொள்ளவும்