ஆறுதல் வெற்றியை ருசிக்குமா மேற்கிந்திய அணி?

0

இலங்கை சுற்றுலா மேற்கிந்திய அணியிடையேயான மூன்றாவதும் இறுதியுமான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது முன்னதாக நாணயசுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஜம்பது ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்களையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி 308 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியாயினும் பெறவேண்டும் என்ற முனைப்பில் மேற்கிந்திய அணி மிக நிதானமான துடுப்பெடுத்தாடி வருகின்றமையினை காணமுடிகின்றது.

செய்தி பதிவேற்றப்படும் வரை மேற்கிந்திய அணி இரண்டு வீரர்களை இழந்து 39.2 ஓவர்களுக்கு 218 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் ஏற்கனவே தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.