இங்கிலாந்தில் தங்கியிருந்த 148 பேர் மீண்டும் திரும்பியுள்ளனர்.
இலங்கைக்கு வர முடியாமல் இங்கிலாந்தில் தங்கியிருந்தவர்களே இன்று(வியாழக்கிழமை) நண்பகல் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
யு.எல் 504 எனும் விமானம் மூலம் குறித்த அனைவரும் லண்டனிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.