‘இடுகம’ நிதியத்தின் கணக்கு, கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது

0

‘இடுகம’ எனப்படும் ‘செய்கடமை’ கொவிட் நிதியத்தின் கணக்கை பரிசோதிப்பதற்கான பொறுப்பு, தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நிதியத்தின் முகாமைத்துவ சபை இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச சட்டத்திற்கமைய, வெளிநாட்டு உதவிகள் மற்றும் அன்பளிப்புகள் திறைசேரியிடமே வழங்கப்படுவதுடன், இடுகம கொவிட் நிதியத்திற்கும் சர்வதேச நிறுவனங்களினால் கிடைக்கப்பெறும் அன்பளிப்புகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென அந்த காணொளி பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடுகம கொவிட் நிதியத்திற்கு 175,242,793 ரூபாய் 24 சதம் நிதி கிடைக்கப்பெற்றிருந்தது.

அவற்றுள், 391,479,824 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கொவிட் முகாமைத்துவ சபை தெரிவித்துள்ளது.

எஞ்சிய தொகையை, தடுப்பூசிக்காக செலவிட அரசாங்கம் தீர்மானித்திருந்து.

இதற்கமைய, எஞ்சிய 136,922,969 ரூபா 24 சதம் நிதி தடுப்பூசிக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இடுகம கொவிட் நிதியத்தில், தற்போது பெருந்தொகையானவை நிதி தெளிவுப்படுத்தல் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்காக 675,043,967 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை செலவுக்காக 426,005,812 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக 380,031,065 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.