இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் ஆரம்பம்!

0

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் தற்போது விவாதம் நடைபெற்று வருகின்றது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதையடுத்து அதன் மீதான விவாதம் நேற்றும் இன்றும் இடம்பெற்று வருகின்றது.

குறித்த இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் நான்கு மாதங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையின் மொத்த செலவீனம் ஆயிரத்து 747 தசம் 68 பில்லியனாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் இந்த இடைக்கால கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.