இடைக்கிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்து!

0

இடைக்கிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஒழிப்பு தொடர்பாக 80 வீதத்துக்கும் அதிகமான சமூக இடைவௌியை கடைப்பிடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், இடைக்கிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இயலுமானவரை வீடுகளிலேயே இருக்குமாறு பொதுமக்களை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், தனிப்பட்ட சுகாதாரம் தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்தும் முக்கிய கவனம் கொள்ளுமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.