இணையத்தளங்களை இரு வாரங்களில் ஒழுக்கப்படுத்த தீர்மானம்

0

இணையத்தளங்களை ஒழுங்குப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

இணையத்தளங்களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.

சமூக ஊடகங்களின் ஊடாக இனவாதத்தை பரப்பும் வகையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறிக்கிட்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இவ்வாறான விடயங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சிங்கப்பூரில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தை ஆராய்ந்து, புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

பிரஜைகளின் சுய கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டிய விதத்தில், பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டம், மறுசீரமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.