இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி

0

இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இணையத்தளம் ஊடாக சில அங்காடிகள் மூலம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளரின் கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.