இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி மறுப்பு

0

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், முத்திரையிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, மதுபான விற்பனையை இணையத்தளம் வழியாக மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மதுவரித்திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியது.

எனினும் நாட்டில் கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்திடமும் இதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.