இது இனவாதம் பார்க்கும் நேரமல்ல – பைஸர் முஸ்தபா!

0

கொரோனாவை இனவாதத்துடன் நோக்க வேண்டாம்  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிருக்கே ஆபத்தான கொரோனா என்ற கொடிய நோயை வைத்து, சில ஊடகங்களும் அமைப்புகளும் இனவாத நெருப்பை மூட்டத் துடிப்பதானது கண்டிக்கத்தக்க ஈனச் செயலாகும்.

கொரோனா தொற்றை இன்று சிலபேர் இனவாதப் பிரச்சினையாக உருவாக்கப் பார்க்கின்றனர். இது இனவாதம் பார்க்கும் நேரமல்ல.

அதற்காக  சண்டை சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் தருணமுமல்ல. இக்கட்டான இத்தருணத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.