இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நாடு திரும்பினார்

0

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்.

அதன்படி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் 10ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டார்.

இந்த விஜயத்தில், பிரதமருடன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினரும் சென்றிருந்தனர்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தும் முகமாக குறித்த விஜயம் அமைந்திருந்தது.

அதன்படி, ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்ற இலங்கை முயற்சித்து வருகிறது என தெரிவித்தார்.

மேலும் கொரோனா பரவல், நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.