இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வௌியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அறிவிப்பு!

0

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததாக வௌியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவந்தி தெல்பிட்டிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இத்தாலி ஊடகங்களில் மாத்திரம் தகவல் வௌியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக இதுவரை உறுதியாகவில்லை என ரோமுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.