இத்தாலி செல்ல முயற்சித்த தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

0

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போலித் தகவல் உள்ளடக்கிய விசா, கடவுச்சீட்டு மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

டோஹா ஊடாக இத்தாலிக்கு செல்ல முயற்சித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிால் நேற்று அதிகாலை கைது செயெ்யப்பட்டுள்ளார்.

அவர் மன்னார், வெல்லாலகுளம் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய தமிழ் இளைஞனாகும்.

அவர் நேற்று அதிகாலை 3.15க்கு கட்டார் டோஹா நோக்கி செல்லும் கட்டார் விமான சேவையின் விமானத்தில் செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார்.

அங்கு விமான அனுமதி பத்திரம் பெறுவதற்காக வந்த இளைஞனின் இத்தாலி கடவுச்சீட்டை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் வழங்கிய விசா மற்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியாதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வாழும் நபர் ஒருவரின் விசாவின் தகவலை பயன்படுத்தி அதில் தனது புகைப்படத்தை சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைக்காக குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.