இந்தியாவில் ஏற்பட்ட கோவிட் நிலைமை இலங்கையில் ஏற்படலாம் – சுகாதார அமைச்சு

0

கோவிட் ஆபத்து குறித்து அவதானமின்றி மக்கள் செயற்பட்டால் இந்தியா முகம் கொடுக்கும் நிலைமை இலங்கைக்கு ஏற்படுவதனை தவிர்க்க முடியாமல் போகும் என சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது. 

எப்படியிருப்பினும் இந்தியா முகம் கொடுத்துள்ள நிலைமை, இலங்கைக்கு ஏற்படுவதனை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பானர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடு அபாய நிலைமையில் உள்ளதென்ற வார்த்தையை பிரயோகிக்க முடியாது. எனினும் தீவிர நிலைமையில் உள்ளதென கூறுலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் அறிகுறிகளற்ற நோயாளிகளை சில நாட்கள் வீட்டில் வைக்க நேரிடும். எனினும் நோயாளிகளுக்கு ஆபத்தான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.