இந்த வருடம் முழுவதும் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படாதாம்!

0

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் முழுவதும் எரிபொருள் விலைகளில் அதிகரிப்போ அல்லது குறைப்போ செய்யப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2019 ஆம் ஆண்டு மருத்துவ விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைகளுக்கு 10 பில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.