இன்று இரவு ஒளிப்பரப்பாகின்றது பிரதமரின் விசேட உரை!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

இன்று(செவ்வாய்கிழமை) இரவு 7.45 மணிக்கு இந்த விசேட உரை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பாகவுள்ளது.

நாட்டில் கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது மக்களுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.