இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும். வெளியான தகவல்!

0

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சி.பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான வர்த்தகமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் வெளியிடப்படவுள்ளது.

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிப்பகுதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஆளுந்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலை நடத்துவதற்கு 2 மாத கால அவகாசம் தேவைப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவின் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு 15க்கு உட்பட்ட கட்சிகள் போட்டியிடுமானால் 500 மில்லியன் செலவாகும் எனவும் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் தேர்தல் செலவுகளும் அதிகரிக்கும் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால் மே முதல் வாரத்தில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் எனவும் மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதால் அன்றையதினம் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
எதுஎவ்வாறிருப்பினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வமான வர்த்தகமானி வெளியிட்டதன் பின்னரே வேட்புமனுத்தாக்கல், தேர்தலுக்கான  திகதி என்பன உறுதியாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.