இன்று நாடளாவிய ரீதியில் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

0

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மருந்தகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஆயுர்வேத மருந்தகங்களையும் இந்த காலப்பகுதியில் திறப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது நடமாடும் சேவைக்கு அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொத்தமல்லி, இஞ்சி, வெனிவேல் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் ஆயுர்வேத சிகிச்சைகளை பெறுவோருக்கு வீடுகளுக்கே மருந்துகளை அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.