வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழமுக்கமானது சூறாவளியாக வலுவடையுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அம்பன் சூறாவளி என தாய்வான் பெயரிட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த அம்பன் சூறாவளி அடுத்துவரும் நாட்களில் வங்காளவிரிகுடாவின் வடக்கு திசையில் பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழமுக்கமானது மேலும் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தாழமுக்கமானது வடமேற்கு திசைநோக்கி நகரக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் இதன் காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
அத்துடன் காற்றின் வேகமானது 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் ஆக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தெற்கு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்தியமாகாணங்களில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன், சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தொடர்ந்து வரும் அதிக மழையுடனான வானிலைக் காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, குருணாகலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின், நாகொட, பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியகம மற்றும் போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, அஹங்கம, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர, புலத்சிங்கல, வலல்லவிட்ட, ஹொரன, இங்கிரிய மற்றும் மதுகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொலஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட மற்றும் தெரனியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது
மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள்முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும், அனர்த்தங்கள் இடம்பெறுகின்ற சந்தர்பங்களில் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருவதன் காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தெதுரு ஓயாவினை அண்மித்துள்ள, மஹவ, வாரியபொல, நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர, பிங்கிரிய, பல்லம, ஆராச்சிக்கட்டுவ மற்றும் சிலாபம் உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அத்தனகல்ல ஓயாவின், திவுலுப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, கம்பஹா, ஜா – எல்ல, மஹர, கடான மினுவாங்கொட மற்றும் வத்தளைஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களனி கங்கையை அண்மித்த பிரதேசங்களான ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, சீதாவாக்க, கடுவெல, பியகம, ஹோமகம, கொலன்னாவ மற்றும் கொழும்பு ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுககப்பட்டுள்ளது.