இன்று முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப் படை

0

இன்று முதல் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைச்சாலைகளுக்கு வெளியே பாதுகாப்புக்காக விசேட அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த விடயத்தை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறைக் கைதிகளின் உறவினர்களையும் அவர்களது உடமைகளையும் சோதனை செய்யவும், சிறைச்சாலைகளுக்குள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.