இன்று முதல் மீண்டும் அறவிடப்படுகின்றது வாகன தரிப்பிடக் கட்டணம்

0

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் தரித்துநிற்கும் வாகனங்களுக்கு மீண்டும் தரிப்பிடக் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) முதல் இவ்வாறு தரிப்பிடக் கட்டணம் அறவிடப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டதை அடுத்து, மாநகர சபையின் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாட்டின் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

8 பிரிவுகளின் கீழ் கட்டணம் அறவிடப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை ஆணையாளரால் வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.