தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட 97000 இற்கும் மேற்பட்ட நூல்களை தன்னகத்தே கொண்டிருந்த யாழ் பொது நூலகம் இலங்கை தென்னிலங்கை ஆட்சியாளர்களினால் எரிக்கப்பட்டு நாள் இன்றாகும்.
எரிக்கப்பட்ட நூல்களில்.
நூற்றாண்டுகள் பழைமையான பல நூறு ஓலைச்சுவடிகள்.
1800 களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள்.
கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா என்பவர் நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்கள்.
1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல்.
1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல்.
1585-ல் கத்தோலிக்க மதத்தின் தலைவர் எழுதிய நூல் ஒன்று.
என 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அடக்கம்.
இதேநாள் 31.05.1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது.