இன்றைய வானிலை – மழையுடனான வானிலை

0

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மழையுடனான வானிலை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டல வியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் அநுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேபோல், சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் நுவரெலியா,களுத்துறை,காலி மற்றும் மாத்தரை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்துகொழும்பு, காலி மற்றும் ஹம்பாந் தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கடற்பரப்பு களில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோ ரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள் ளப்படுகிறீர்கள்.