தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இன்றைய கூட்டத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.