acebook Inc நிறுவனத்தின் WhatsApp செயலியின் குரல் மற்றும் காணொளி அழைப்பு அம்சம் இப்போது desktop கணினியிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உருவப்படம் (portrait), நிலப்பரப்பு (landscape) முறையில் பயனீட்டாளர்கள் desktop-இல் அழைப்புகள் விடுக்கலாம்.
காணொளிச் சந்திப்புச் செயலிகளான Zoom, Google Meet நிறுவனங்களுக்கு நிகராக WhatsApp செயலியின் காணொளி அழைப்பு இருக்கும்.
WhatsApp அந்த இரண்டு நிறுவனங்களுடன் போட்டியிடத் திட்டமிடுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்பட்டது.
கிருமித்தொற்றுச் சூழலில் அதிகமானோர் காணொளி அழைப்புச் செயலிகளைப் பயன்படுத்துவதால் WhatsApp அதிலிருந்து பயன்பெற்றதாகக் கூறப்பட்டது.