இமாம் ஜமாஅத், ஜும்ஆ தொழுகைகளுக்கு வக்பு சபை அனுமதி

0

இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்கு வக்பு சபை அனுமதியளித்துள்ளது.

வக்பு சபை கடந்த 3 ஆம் திகதி மற்றும் 11 ஆம் திகதி வெளியிட்ட சுற்றுநிரூபங்களில் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இலங்கை வக்பு சபை பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.

பள்ளிவாசல்கள் தனிநபர் தொழுகைக்காக திறக்கப்பட்ட போதிலும் ஐவேளை கூட்டுத்தொழுகை மற்றும் ஜூம்மா தொழுகை என்பன மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஏற்கனவே வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக ஜமாஅத் மற்றும் ஜூம்ஆ தொழுகைக்கு அனுமதியளிப்பதாக வக்பு சபை அறிவித்தது.