இரகசிய திட்டத்தில் கோட்டாபய அரசாங்கம் – அம்பலத்திற்கு வந்த தகவல்!

0

அரசாங்கத்தினால் இரசாயன உரம் மற்றும் இரசாயன கிருமிநாசினி பாவனை தடை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரகசியமான முறையில் இரத்து செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்றைய தினம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில், இரசாயன பூச்சிக்கொல்லியை இறக்குமதி செய்யும் 29 நிறுவனங்கள் உள்ள நிலையில் ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் 10 பில்லியன் பெறுமதியான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கவுள்ளமை எவரது நோக்கத்திற்காக என வினவியுள்ளார்.