இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளதாக, தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரமே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டினை பதிவு செய்த சிவில் அமைப்பு உறுப்பினர் அலுத்கம இந்ர ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுரேன் ராகவனுக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்ட விதம் குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளதாக, சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
சுரேன் ராகவனுக்கு தேசிய பட்டியல் வழங்கப்படுகின்றமை குறித்து, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயகேரவிடமோ அல்லது வேறு உறுப்பினர்களிடமோ வினவப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.