இரண்டாவது நாளாகவும் முடங்கியது மட்டக்களப்பு!

0

நாடளாவியரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் கடுமையான முறையில் கடைப்பிடித்து வருகின்றனர்.

சுகாதார துறையினரும் மற்றும் அத்தியாவசிய சேவைக்கு பணிக்கப்பட்ட அதிகாரிகளும் அத்துடன் ஊடகத்துறையினரும் உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் சகல வீதிகளும் வெறிச்சோடிக்கிடந்தமை அவதானிக்க முடிந்தது எல்லா வீதிகளும் இராணுவம் பொலிஸாரி நடமாட்டங்களும் அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களையும் அவதானிக்கமுடிந்தது.

ஊரடங்கு சட்டத்தினை மீறிய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.