இரண்டுவாரத்துக்குள் இ.தொ.காவுக்கு புதிய தலைவர்!

0

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் தெரிவுசெய்யப்படுவார் என அறிய முடிகிறது.

இ.தொ.காவின் தலைவராகவிருந்த ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து தலைமைத்துவத்துக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் அன்றாடச் செயற்பாடுகளை கொண்டுசெல்ல முத்துசிவலிங்கம், செந்தில் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், மாரிமுத்து ஆகியோரை கொண்ட இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் கட்சியின் தலைமைத்துவப் பதவி குறித்தும் உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான், முத்துசிவலிங்கம் உட்பட சில முக்கிய உறுப்பினர்களின் பெயர் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் ஜீவன் தொண்டமானுக்கே தலைமைப் பதவியை வழங்க வேண்டுமென்றே பெரும்பாலானவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எதிர்வரும் இரண்டுவாரக் காலப்பகுதிக்குள் கட்சியின் தலைவரை தெரிவுசெய்ய இ.தொ.காவின் உயர்மட்ட குழுவினர் ஆலோசித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.