இரண்டு வாரங்களேனும் நாட்டு மக்களை வீட்டிற்குள் முடக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது – சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே!

0

நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களாவது முடக்கினால் மாத்திரமே கொரோனா தொற்று அதிகரிப்பினை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மும்மடங்கு நோயாளர்கள் சமூகத்தில் இருக்க முடியும். இவர்களின் வாயிலாக மேலும் தொற்று பரவக்கூடலாம்.

நிச்சயமாக, தற்போதைய நிலைமைக்கு அமைய இரண்டு வாரங்களேனும் நாட்டு மக்களை வீட்டிற்குள் முடக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

அவ்வாறு ஒரு நடவடிக்கையினை மேற்கொண்டால் மாத்திரமே கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதனை தடுக்க முடியும்.

ஒரு வைத்தியர் என்ற வகையில் நான் பரிந்துரைக்கின்றேன். முடக்க நிலை அவசியமாகும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.