இரத்தினபுரியில் ஆயிரத்து 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

0

இரத்தினபுரியில் ஆயிரத்து 47 பேர் 21 நாட்கள் வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.பி.கன்னங்கர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் முதலில் இனங்காணப்பட்ட மாணிக்கக்கல் வியாபாரியின் மனைவி குறித்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.