இரத்தினபுரி, பெல்மதுளையில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிக்கிறது

0

இரத்தினபுரி, பெல்மதுளை பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாதெனவும் குறித்த பகுதிகளில் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றையதினம் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பில் விசாரணைகள், தேடல்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் இன்று காலை 6.00 மணிக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அம்மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தளர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.