இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஈஸ்டர் தாக்குதல் நினைவுகூரல்!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றதையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  நினைவுகூரல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மக்கள் அமைப்பிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்பொது, ஈஸ்ட்ர் தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.