இராணுவ கேர்ணலுக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று?

0

இராணுவ கேர்ணல் ஒருவரும், அவரது மகனும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கேர்ணலின் தாயும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் காரணமாக கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கு சொந்தமான வேரஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே 22 ஆம் தொற்றாளராக இராணுவ மேஜர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவர் இத்தாலியில் இருந்து வந்தோரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.