இரா.சாணக்கியனுக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் மற்றுமொரு தடை உத்தரவு!

0

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு  நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், மட்டக்களப்பிற்குள் போராட்டங்களை நடத்த மட்டக்களப்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன், இது குறித்த அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையிலேயே நீதிமன்றத்தின் தடையுத்தரவு இன்று(செவ்வாய்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் பொலிஸாரினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் நேற்றைய தினம் தடைவிதித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.