இருதய நோய்க்குள்ளான ஜேர்மனிய பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0

MSC Magnifica பயணிகள் கப்பலில் இருந்த, இருதய நோய்க்குள்ளான ஜேர்மனிய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

75 வயதான ரோஸ்மேரி மார்கிரட் எனும் பெண் இருதய நோய்க்குள்ளானமையால் மருத்துவ உதவிக்காக அவர் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இந்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததும், அதிலிருந்த இலங்கை பணியாளர் ஒருவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டார்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் இணக்கப்பாடுகளுக்கு அமைய, இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசிக்கும் கப்பல் தொடர்பில் ஆராய்வதற்கும் வலயங்களுக்குள் ஏற்படும் அவசர நிலைமையின் போது நிவாரணத்தை வழங்குவதற்குமான பொறுப்பு இலங்கை கடற்படையினருக்குள்ளது.

எனினும், பொறுப்புகளுக்கு அப்பால், உலக நாடே தற்போது எதிர்கொண்டுள்ள சுகாதார சவாலை கருத்திற்கொண்டு மனிதாபிமான நோக்குடன் குறித்த ஜேர்மனிய பெண்ணை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றனர்.