இறுக்கமாக்கப்படும் கட்டுப்பாடுகள்! வெளியானது புதிய அறிவிப்பு

0

மாகாணங்களுக்கு இடையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இணையவழியூடாக இன்று இடம்பெற்ற கோவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வரும் விடுமுறையுடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறைகள் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.